How do you check about HDD Status in Tamil
How do you check about HDD Status in Tamil :-
வணக்கம் நண்பர்களை இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு எது பற்றியது என்றால் HDD (Hard Disk Dive) ன் நிலையை பற்றியதாகும்.
வாருங்கள் பார்ப்போம் சில சமயங்களில் எமது C : வில் அதிகளவிலான File சேமிக்கப்படும் போது HDD ஆனது Load ஆகி வேகம் குறைந்து விடும். அப்படி இருந்தால் நாம் யோசிக்க தேவை இல்லை ஏன் என்றால் Data வை வேறு Drive ல் மாற்றினாலோ அல்லது C Drive Clean பண்ணினாலோ அல்லது தேவையற்ற File ஐ Delete பண்ணி விட்டாலோ சரியாகிவிடும் வேகமும் அதிகரித்து விடும்.
ஆனாலும் HDD வில் மிகப்பெருமளவிலான இடம் இருந்தாலும் கூட கணிணியின் வேகம் குறைவாகவே காணப்படுவதையும் காணலாம். இவை பெரும்பாலும் HDD இல் Bad Sector சேர்ந்திருதிருப்பதனால் உருவாகும். இதற்காக நாம் MS Dos மூலமாக HD Drive வின் நிலையை சோதித்துப்பார்க்கலாம் அதில் Ok என்று வந்தால் பரவாயில்லை இல்லாவிடின் நமக்கு தேவையான முக்கியமான தரவுகளை Back Up செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்று அர்த்தம். வாருங்கள் எப்படி Check பண்ணுவது என்பது பற்றிப்பார்ப்போம்.
முதலில் Cmd Type செய்து Search பண்ணுங்கள்.
வரும் Window வில் Run as Administrator என்பதை Click செய்யுங்கள்.
இப்பொழுது MS Dos ஆனது Open ஆகியிருக்கும் அதில் wmic (Windows Management Instrumentation Command) என்று Type செய்து Enter பண்ணுங்கள்
- Wmic பற்றி இன்னும் அதிகமான Command களை அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக பார்ப்போம்.மிக முக்கியமான OS பற்றிய பல விடயங்களை இதன் மூலம் அறியலாம்.
பின்னர் diskdrive get status என்று type செய்து Enter பண்ணுங்கள்.
Status ஆனது Ok என்று வருகின்றதா என்று பாருங்கள் இல்லாட்டி Backup உரிய நடவடிக்கை எடுங்கள்.
🙏🙏🙏🙏This is Also Our Subsidiary Blogger please refer this one also 🙏🙏🙏🙏http://tamilcomputerorupaarvai.blogspot.com/
👂👂👂 Comments வரவேற்கப்படுகின்றது👂👂👂
தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து வாழ்க வளமுடன்.
0 Comments