How to find Age in Excel 

How to find Age in Excel :- வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருப்பது MS Excel பற்றிய ஒரு பதிவு ஆகும்.  இரண்டு Date களுக்கிடையான வித்தியாசங்களை ஆண்டு ,மாதம், நாள் கணக்கில் நாம் பார்க்க போகின்றோம். 

 உதாரணமாக நாம் பத்திரிகைகளில் வேலை வாய்ப்பு விண்ணப்பங்களை காணலாம் அதில் அவர்கள் இந்த விண்ணப்பம் முடியும் திகதியில் உங்கள் வயது என்ன என்று கேட்டிருப்பார்கள். ஆண்டு ,மாதம், நாள் கணக்கில். சாதாரணமாக நாம் Manual ஆக கழித்து விடையை காணலாம் இருந்தாலும் நாம் Ms Excel ல்  Expertஆக மாறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பதால் Excelல் இதற்கான விடையை எப்படி காண்பது என்று பார்ப்போம். பிறகு என்ன Ms Excel  ஐ பண்ணுங்கள்.


தேவைக்கு ஏற்றவாறு  Data ஐ Enter பண்ணிக் கொள்ளுங்கள்.

  • இங்கு DOB என்பது :- 05/04/1986 ஆகும். Application Date என்பது  12/4/2020 ஆகும்.

அடுத்ததாக இரண்டு தேதிகளுக்கும் இடைப்பட்ட வருடத்தை காண்போம்.C2 Cell ல் கீழ் கண்ட Formula வை Enter பண்ணிக் கொள்வோம். அதில் முதலாவது ஆரம்பிக்கும் திகதியும் (A2) அடுத்ததாக முடிவடையும் திகதியும் (B2) பிறகு விடை எப்படி வரவேண்டும் என்று கொடுக்க வேண்டும் இங்கு ஆண்டைக் கொடுத்துள்ளேன்(Y).

=DATEDIF(A2,B2,"Y") 

அவ்வளவுதான் பாருங்கள் எத்தனை வருடம் என வந்து விடும்.





அதே போல் மாதத்தை காண கீழ் வரும் Formula Enter பண்ண வேண்டும்
=DATEDIF(A2,B2,"ym")

அத்துடன் நாட்களை காண இந்த Formula வையும் Enterபண்ணினால் விடை வரும்.
=DATEDIF(A2,B2,"md")

ஆகவே இங்கு குறிப்பிடப்படும் நபருக்கு வயது 34 வருடங்களும் 7மாதங்களும் 10 நாட்களும் ஆகும்.


இனியென்ன தேவையான வேளைகளில் இந்த Formula வை பயன்படுத்தி பயனடையுங்கள்.




🙏🙏🙏🙏This is Also Our Subsidiary Blogger please refer this one also 🙏🙏🙏🙏http://tamilcomputerorupaarvai.blogspot.com/

👂👂👂 Comments வரவேற்கப்படுகின்றது👂👂👂

தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து   வாழ்க வளமுடன்.