இன்றும் நாம் பார்க்க இருப்பது ஒரு சிறிய Excel Tips பற்றியதுதான்.நேரடியாக விடயத்திற்கு செல்வோம்.
இந்த tips எதற்கு பயன்படும் என்றால் நாம் ஒரு Column ல் முழுப்பெயரை பெற்று விட்டோம் , ஆனால் Data எமக்கு தேவை தனித்தனியான இரண்டு வேறு Column களில். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
1.தேவையான Data வை கீழ்வருமாறு Design பண்ண வேண்டும்.
2.தேவையான Column (A) த்தை Select பண்ண வேண்டும்.
3.இப்பொழுது Data Tab ற்கு சென்று Text to Column என்பதை click பண்ண வேண்டும்.
4.அப்போது தோன்றும் Windows வில் முதலாவதாக வரும் Delimited என்ற Radio Button ஐ Select பண்ணவேண்டும்.
5.Click Next
6.அதில் Space என்பதை Select பண்ண வேண்டும் ஏனென்றால் நமது Data வில் இரண்டு Word ஐயும் பிரிப்பது Space மட்டுமே. அதற்காக தான் நாம் Space தெரிவு செய்கின்றோம்.
7.Click Finish
8.அடுத்து வரும் Message Box ற்கு Ok ஐ Click பண்ணினால் அடுத்த Column த்தில் Data பிரிந்து வந்திருப்பதை காணலாம்.
தெரியாதவற்றை தெரிந்து , தெரிந்தததை சொல்லிக் கொடுத்து வாழ்க வளமுடன்.





0 Comments